"எனக்கு இயற்கை வியாபாரம்; இணையம் விளம்பரம்" - அசத்தும் 90'ஸ் கிட்ஸ் பெண்! - herbal package
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது முன்னோர்களிடம் பெற்ற அனுபவம் மூலமாகவும் புனேயில் சிறப்புப் பயிற்சி பெற்றதன் மூலமாகவும் இயற்கையான முறையில் சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில் உள்ளிட்டவைகளை தானே தயாரித்தும் வருகிறார். ஆரம்பத்தில் தனது சொந்த தேவைக்காக மட்டுமே பொருட்களை தயாரித்து உபயோகப்படுத்தி வந்த இவரின் பணி, தற்போது "அம்மு நேச்சுரல்ஸ்" என்ற பெயரில் வணிகமாக மாறி நிற்கிறது.