காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா..! - ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையம்
திருப்பத்தூர்: ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.