இரட்டை இலை வடிவில் சிகை அலங்காரம் செய்து வாக்கு சேகரிக்கும் அதிமுக தொண்டர்! - கோயமுத்தூர் அண்மைச் செய்திகள்
கோயமுத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஜெயராம் போட்டியிடுகிறார். இந்நிலையில் உடையாம்பாளையம் 66 ஆவது வார்டைச் சேர்ந்த அதிமுக பேரவை தலைவர் கோபால், தனது தலையில் இரட்டையிலை போல் சிகை அலங்காரம் செய்து, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கட்சியின் சின்னத்தை சிகை அலங்காரமாக்கி ஆதரவு திரட்டி வரும் கோபாலை அனைவரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.