Viral Video: ஆட்டோவில் சென்று ட்ரெண்ட் ஆன தமிழ்மகன் உசேன்! - அதிமுக தற்காலிக அவைத் தலைவர்
அதிமுக செயற்குழு கூட்டத்தை நடத்தும்போது அவைத்தலைவர் தலைமையில் நடத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால், தற்போது அவைத் தலைவர் இல்லாததால் தற்காலிக அவைத் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்மகன் உசேன் தற்காலிக அதிமுக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்குழு கூட்டம் நிறைவடைந்தபின் தமிழ்மகன் உசேன் ஆட்டோவில் திரும்பிச் சென்ற காணொலி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.