10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் வந்த மாணவர்கள் - 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் 9, 11ஆம் வகுப்புகள் இன்றுமுதல் செயல்படத் தொடங்கின. மாணவர்களுக்கு கரோனா வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு கொண்டுவராத மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது என்றும், சத்துணவு மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களுக்குத் தனி தட்டு வைத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.
Last Updated : Feb 8, 2021, 1:30 PM IST