அதிமுகவிற்காக வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிப்பு! - covai district news
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் சத்திரபதி தலைகீழாக நடந்தபடி சுமார் 800 கிலோவிற்கு அதிக எடையுடைய காரை சங்கிலியால் கட்டியபடி இழுத்துச் சென்றார். இந்த ஆதரவு திரட்டும் முயற்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.