'ஆட்சியைப் பிடிக்க வேண்டியதில்லை; எங்களைக் கேட்டுதான் ஆட்சி நடக்கும்' - இன்னும் 40 வருசத்துக்கு; மாநில அரசு மத்திய அரசிடம் கையேந்தி தான் ஆக வேண்டும் நடிகர் ராதாரவி
தமிழ்நாட்டில் தற்போது நான்கு பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர். அடுத்தபடியாக 2026இல் தமிழ்நாட்டில் 80 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள். நாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டியது இல்லை, எங்களைக் கேட்டுத்தான் ஆட்சி நடக்கும். மாநிலம் சார்ந்த நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசிடம் கையேந்திதான் ஆக வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.