பெண் கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: அதிமுகவினர் டிஜிபியிடம் புகார் - பெண் கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம்
சேலம் மாவட்டம் பனைமரத்துபட்டி ஊராட்சி ஒன்றிய குழு பெண் உறுப்பினர்களான சங்கீதா, பூங்கொடி ஆகியேரை திமுக ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் தூண்டுதலின் பேரில் ரவுடிகள் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் கழக தேர்தல் பிரிவு இணை செயலாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை, வீரப்பாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜமுத்து ஆகியோர் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.