ஈரோடு: மார்க்கெட்டுக்குள் படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு
ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (மே.30) இரவு தாளவாடியிலிருந்து மார்க்கெட் வந்த சரக்கு வாகனத்திலிருந்து தக்காளி பெட்டிகளை இறக்கி வைக்கும் போது 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று பெட்டி ஒன்றில் இருந்தது. இதனை கண்ட கூலித் தொழிலாளர்கள், வியாபாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் யுவராஜா பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.