தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

யோகா சிறுமி: 7 வயது சிறுமி கிணற்று நீரில் யோகா செய்து அசத்தல்! - கோம்புத்தூர் யோகா சிறுமி

By

Published : Jul 21, 2021, 10:04 PM IST

கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பூவராகவன் சுகந்தி தம்பதியின் 7 வயது மகள் தியாமிகசாய், தண்ணீரில் மிதந்தபடி யோக செய்து அசத்தி வருகிறார். தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் தியாமிகசாய் தன் தாத்தா காளியப்பன் உதவியுடன் சிறுவயது முதல் தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழகி உள்ளார். தாய் தந்தையின் ஊக்கத்தால் யோகாசனங்கள் செய்ய கற்றுக்கொண்ட சிறுமி, அதனை கிணற்றில் நீந்தியபடி செய்து பார்த்துள்ளார். தொடர்ந்து நீரில் மிதந்தபடி யோகாசனங்களை செய்து பார்த்த பயிற்சியால், தற்போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கிணற்றில் பத்மாசனம் செய்து அசத்தி வருகிறார். "தனது தாத்தா கற்றுக் கொடுத்த நீச்சல் பயிற்சியால், கிணற்றில் யோகாசனங்களை செய்கிறேன்.என்னால 4 வகையான ஆசனங்களை கிணற்றில் செய்ய முடியும்" என மழலை மொழி மாறாமல் கூறுகிறார் தியாமிசாய்.

ABOUT THE AUTHOR

...view details