7.5% இட ஒதுக்கீடு - தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு - சென்னை மாவட்ட செய்திகள்’
பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதற்குத் தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த உயரிய நோக்கத்தால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்றார்.