உலக மக்கள் நன்மை வேண்டி பிரம்ம ரிஷி மலையில் 51 நாட்கள் கோ பூஜை! - பிரம்ம ரிஷி மலை
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரம்ம ரிஷி மலை. இங்கு 210 சித்தர்கள் அருள் புரிந்துவருவதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், உலக மக்கள் நன்மை வேண்டி ”51 நாட்கள் கோ பூஜை” இன்று தொடங்கியது. இதில், யாக வேள்வி தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பல்வேறு மூலிகைப் பொருட்கள், 210 சித்தர்களின் நாம வழி கூறப்பட்டு மஹா பூர்ணா ஹூதி நடைபெற்றது. இதனையடுத்து, கோமாதாவிற்கும் அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.