புலிகள் காப்பகம் தங்கும் விடுதியில் 50 சதவீதம் கட்டணம் குறைப்பு
நீலகிரி மாவட்டம், சுற்றுலா தளமான முதுமலை புலிகள் காப்பகம் தங்கும் விடுதிகளுக்கு 50% விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை கட்டணம் சீசன் அல்லாத காலங்களான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் ஜனவரி, பிப்ரவரி மொத்தம் 4 மாதங்கள் நடைமுறையில் இருக்கும் என்று முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கோஷல் அறிவித்துள்ளார்.