ரத்தக் காயங்களுடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்! - மதுரை பாண்டியன் விரைவு ரயில்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயிலின் மேற்கூரையில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வயிறு, கழுத்துப் பகுதிகளில் ரத்தம் வழிந்த நிலையில் கூச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூச்சலிட்டபடி உயரழுத்த மின்சார கம்பியையும் தொடமுயன்றது அருகிலிருந்தவர்களை பீதியடைய வைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் அந்த இளைஞரை மீட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
TAGGED:
மதுரை பாண்டியன் விரைவு ரயில்