டேங்கர் லாரியில் கடத்தி வந்த எரிசாராயம்; விரட்டி பிடித்த காவல் துறையினர்! - இரு சக்கர வாகனம்
ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது டேங்கர் லாரி ஒன்று நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. அதனை, பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினரை கண்டு நான்கு பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர், அங்கிருந்த 500கேன்களில் இருந்த 25ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தையும் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட 2 லாரிகள், நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதனுடைய மதிப்பு ரூ 1கோடியாகும்.