தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி! கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு - 2000 கல்லுாரி மாணவிகள் வாக்காளர் பேரணியில் பங்கேற்பு
தருமபுரி மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், தனியார் மகளிர் கல்லுாரி இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் சுமார் 2000 கல்லுாரி மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பேரணியில் மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.