மழை நீரில் இயங்கிவரும் 130 ஆண்டு பழமையான இனிப்பகம் - மழை நீர் சேகரிப்பு திட்டம்
திருவாரூரில் 130 ஆண்டுகளாகச் செயல்படடு வரும் நா.கோ. சிவராமராவ் இனிப்பகத்தின் உரிமையாளர் ராகுல், மழை நீரை சேமித்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கடையை நடத்திவருகிறார். இயற்கையாக கிடைக்கும் மழைநீரை வைத்தே தங்களது கடையின் இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அவர், மழைநீரை சேமிக்க பயன்படுத்திவரும் வழிமுறைகள் பற்றி விளக்குகிறார்.