தொண்டாமுத்தூர் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு - python caught in vandikaranur
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூர் பகுதியில் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஆட்டுக்குட்டி காணாமல் போனதால் அருகில் சென்று தேடியுள்ளார். புதர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்றுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், பாம்பு பிடி வீரர் மற்றும் கிராமத்தின்ர் இணைந்து பாம்பை பிடித்தனர். எனினும் ஆட்டுக்குட்டி உயிரிழந்தது.