காக்கிக்குள் ஈரம் - தாய், மனைவிக்கு சிலைகள் அமைத்து 101 லிட்டர் பாலாபிஷேகம் செய்த முன்னாள் காவலர் - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்
மயிலாடுதுறையில் உயிரிழந்த தாய், மனைவிக்கு கோயில் கட்டிய ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன்(72) என்பவர், மனைவி மீனாட்சியம்மாளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்திய காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.