100 விழுக்காடு வாக்குப்பதிவு வலியுறுத்தி கடலூரின் மூத்த குடிமக்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அலுவலர் - 100 விழுக்காடு வாக்குப்பதிவு
கடலூர்: மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் மாவட்டம் முழுவதும் பரப்புரை செய்துவருகிறார். அப்போது மூத்த குடிமகன் நவநீதத்தை (106) சந்தித்து 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து துண்டுப் பிரசுரத்தை வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட காணொளி மக்களை ஈர்த்து வருகிறது.