ஆழ்கடலில் செத்து மிதக்கும் ராட்சத திமிங்கலம்! - cuddalore whale died news
கடலூர் அருகே தாழங்குடா - புதுச்சேரி கடல் பகுதிக்கு இடையே சுமார் 10 டன் அளவு ராட்சத திமிங்கலம் ஒன்று, செத்து மிதந்து கொண்டிருக்கிறது. அதனை, ஆயிரக்கணக்கான பறவைகளும் மீன்களும் கொத்தித் தின்று கொண்டிருப்பதால் அப்பகுதியைச் சுற்றி சுமார் 8 கிமீ தூரத்திற்குத் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உடனடியாக இறந்த திமிங்கலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.