'என்ட பேரு ஸ்டாலின்..!': மலையாளத்தில் 'சம்சாரிச்ச' முதலமைச்சர்; விசில் அடித்து உற்சாகப்படுத்திய 'சகாவுக்கள்' - கண்ணூரில் முதலமைச்சர் ஸ்டாலின்
கண்ணூர் (கேரளா): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளாவில் உள்ள கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது கருத்தரங்கில் கலந்து கொண்டார். இந்தக் கருத்தரங்கை கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில், 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சம்மேளனத்தில் பங்கெடுக்குனு இன்னு... என்ட பேரு ஸ்டாலின் ஆனு' என உரை நிகழ்த்தினார். இதற்கு அங்கு கூடியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் விசில் அடித்து வரவேற்பு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST