ஸ்ரீவில்லிபுத்தூர் செப்புத்தேரோட்டம் - கண்கொள்ளாக்காட்சி - seppu therottam
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்க மன்னார் எழுந்தருள செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர்ந்து ஒருவார காலமாக ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் மாடவீதி மற்றும் நான்கு ரத வீதிகளில் உலா வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் எழுந்தருள செப்புத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷத்திற்கு இடையே நான்கு ரத வீதிகள் வழியாக வந்த தேர் நிலையத்தை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST