உலக அதிசயத்தில் நடைபெற்ற அசத்தலான கால்பந்து போட்டி! - உலக அதிசயங்களில் நடைபெற்ற அசத்தலான கால்பந்து போட்டி!
கெய்ரோ: 2019ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய ஆப்ரிக்க கால்பந்து வீரர்களுக்கு ஆப்ரிக்கா கால்பந்து கூட்டமைப்பு விருது வழங்கும் விழா எகிப்து நாட்டில் இன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நேற்று அந்நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட் முன்பு, ஆப்பிரிக்கா ஜாம்பவான் வீரர்களுக்கும் ஃபிபா ஜாம்பவான் வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி காண்போரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்போட்டியில், ஃபிபா தலைவர் ஜியோனி இன்ஃபான்டினோ தலைமையிலான ஃபிபா அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பு தலைவர் அகமது அகமது அணியை வீழ்த்தியது.