இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் எட்ரிச் காலமானார் - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜான் எட்ரிச்
இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான் எட்ரிச் காலமானார். அவருக்கு வயது 83. இவர் 1963ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 1963 முதல் 1976 வரை மொத்தமாக 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிறந்த இடது கை ஆட்டக்காரராக முத்திரை பதித்த எட்ரிச் 12 சதங்கள் 24 அரை சதங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 1965இல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 310 ரன்கள் எடுத்தார். எட்ரிச்சின் மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.