பிஎன்சி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமான இளம் வயது வீரர்! - கோல்ஃப்
உலக கோல்ஃப் விளையாட்டில் நட்சத்திர வீரராக திகழ்பவர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ். இவர் இதுவரை 15 முறை கோல்ஃப் விளையாட்டின் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் இன்று (டிச.20) தொடங்கிய பிஎன்சி சாம்பியன்ஷிப் கோல்ஃப் தொடரில் டைகர் உட்ஸின் 11 வயது மகன் சார்லி உட்ஸ் அறிமுகமானார். இதன் மூலம், பிஎன்சி சாம்பியன்ஷிப் தொடரில் அறிமுகமான மிகவும் இளம் வயது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.