சிட்னி டெஸ்டிற்கு தயாராகும் ‘ஹிட்மேன்’ ரோஹித்! - இந்தியா vs ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் பயிற்சி மேற்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டுவருகிறது.