கரோனா: பயிற்சிக்கு முன் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்திய லா லிகா அணிகள்! - கரோனா வைரஸ் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
மாட்ரிட்: உலகளவில் கரோனா வைரஸால் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக ஸ்பெயினில் நேற்று பயிற்சி மேற்கொள்வதற்கு முன்னதாக ரியல் மாட்ரிட், அத்லெடிக் பில்பவ், செல்டா விகோ ஆகிய கால்பந்து கிளப் அணிகள் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜூன் 6ஆம் தேதி வரை பிற்பகல் 12 மணியளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துவார்கள் என ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் லா லிகா தொடர் ஜூன் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.