ஆர்க்டிக் ரேலி: அடர் பனிக்கு நடுவே ஆர்பரித்தோடும் கார்கள்! - வால்டேரி போடாஸ்
2021ஆம் ஆண்டிற்கான ஆர்க்டிக் லாப்லாண்ட் ரேலி கார் பந்தயம் நேற்று (ஜன.17) பின்லாந்தில் தொடங்கியது. இதன் முதல் நாளில் ஃபார்முலா ஒன் கார்பந்தய நட்சத்திர வீரர் வால்டேரி போடாஸ் எட்டாவது இடத்தைப் பிடித்து அசத்தினார். இத்தொடரில் மூன்றாவது முறையாக பங்கேற்கும் நட்சத்திர வீரர் ஜூஹோ ஹன்னினெனின் இரண்டு நிமிடங்கள் பின் தங்கிய நிலையில் முதல் நாளை முடித்துள்ளார்.