டக்கர் ரேலி: பாலைவனத்தின் நடுவே சீறிப்பாயும் வீரர்கள்! - ஸ்டீபன் பீட்டர்ஹான்செல்
சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா பாலைவனத்தில் நடைபெற்றுவரும் டக்கர் ரேலி பந்தயம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இதில் நேற்று (ஜன.12) நடைபெற்ற 9ஆம் சுற்று கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் ஸ்டீபன் பீட்டர்ஹான்செல் வெற்றி பெற்று அசத்தினார். அதேபோல் பைக் பந்தயத்தில் அர்ஜென்டினாவின் கெவின் பெனாவிட்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.