ஹோட்டல் அறையில் பயிற்சி மேற்கொள்ளும் கோகோ காஃப்!
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இத்தொடரில் பங்கேற்கவுள்ள அமெரிக்காவின் இளம் நட்சத்திர வீராங்கனை கோகோ காஃப், தனது விடுதி அறையிலேயே பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.