யு-19 உலகக்கோப்பை அரையிறுதி: வெறித்தனம் காட்டிய ஜெய்ஸ்வால்... காணொலி! - பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
யு19 உலகக் கோப்பைத் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.