#INDvsSA பந்து பக்கத்திலிருந்தும் எங்கே என்று தேடிய வீரர்கள்.. மைதானத்தில் சிரிப்பலை! - வைரல் வீடியோ
இந்தியா-தென் ஆப்பிரிக்கா போட்டியில் கேஷவ் மகராஜ் வீசிய பந்து எல்லைக்கோட்டில் உள்ள விளம்பரப் பலகைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டது. இந்நிலையில் பக்கத்திலிருந்த பந்தைப் பார்க்காமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தில் தீவிரமாகத் தேடியது சிரிப்பலையை உண்டாக்கியது. தற்போது இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.