கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானை ஒற்றை ஆளாய் துளைத்து எடுத்த வார்னர்!
ப்ரிஸ்டோல்: உலகக்கோப்பை தொடரின் நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி டெய்லண்டர்களின் அதிரடியான ஆட்டத்தால் 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 209 எடுத்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக வார்னர் 89 ரன்களும், ஃபின்ச் 66 ரன்களும் எடுத்தனர். ஒரு ஆண்டு தடைக்கு பின்னர் களமிறங்கிய வார்னர் இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்து, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.