வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட பார்சிலோனா பயிற்சியாளர்! - வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட பார்சிலோனா பயிற்சியாளர்!
நடப்பு லா லிகா சீசனில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா - கிரனடா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மறுநாள் (20 ஜனவரி) நடைபெறவுள்ள நிலையில், பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக நியக்கப்பட்ட குயிக் செட்டியன், வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. லா லிகா கால்பந்து தொடரின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் பார்சிலோனா அணி 19 போட்டிகளில் 12 வெற்றி, நான்கு டிரா, மூன்று தோல்வி என 40 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.