பஜ்ரங் வெண்கலம் வெல்வார் - தாயார் நம்பிக்கை - பஜ்ரங் புனியா தாயார்
ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் புனியா அஜர்பைஜான் நாட்டு வீரரிடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் நாளை (ஆக.7) நடக்கவிருக்கும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பஜ்ரங் வெண்கலம் வெல்வார் என அவரின் தாயார் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். பஜ்ரங் புனியா நாளை நடக்கும் போட்டியில் ரஷ்ய வீரர் ரஷிதோவை எதிர்கொள்கிறார்.