ஐந்து வயதில் சிலம்பத்தில் உலக சாதனை படைத்த சிறுமி! - சிலம்பத்தில் கலக்கும் சுளகிரி ஸ்வேதாஸ்
ஸ்மார்ட்போன்களில் மூழ்கி கிடக்கும் பல இளம் பிஞ்சுகளுக்கு மத்தியில், சிலம்பத்தில் ஸ்மார்ட்டாக செயல்பட்டு இளம் உலக சாதனையாளராக உருவெடுத்துள்ளார் சூளகிரியைச் சேர்ந்த ஸ்வேதாஸ்ரீ. சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் முதல் பரிசை வென்று அசத்திய இவர், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.