'படிப்பிற்கு தரும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் தரவேண்டும்' கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - படிப்புக்கு தரும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் தரவேண்டும்
திருச்சி: தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பல்வேறு பயிற்சிக் கூடங்களைத் திறந்து வைத்தார். அப்போது அவருடன் பள்ளியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், "படிப்பிற்கு தரும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் தரவேண்டும்" என்றார். பின்னர் மாணவர்களுடன் அவர் விளையாடி மகிழ்ந்தார். தொடர்ந்து, நாம் அவரைச் சந்தித்து ஒற்றைக் கேள்வியை முன்வைக்க எண்ணினோம். ஆனால், 'இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறுப்பில் இருப்பதால், தன்னால் தனிப்பட்ட முறையில் எந்தவிதப் பதிலும் அளிக்க முடியாது' என வருத்தம் தெரிவித்து விடை கொடுத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST