'ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை..முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்சி' - எஸ்.பி. வேலுமணி - எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "எனது வீட்டில் இரண்டாவது முறையாக திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் சோதனை நடத்தி இருக்கிறது. திமுகவை யார் அரசியல் ரீதியாக எதிர்க்கிறார்களோ அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. சோதனையில் ஒரு ரூபாய் பணம், தங்கம் கூட கைப்பற்றப்படவில்லை. என்னுடன் வாக்கிங் வருபவர்கள், பழகுபவர்கள் வீடுகளில் கூட சோதனை நடத்தி இருக்கிறார்கள். இந்த சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம்" என்று கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST