ரெய்டு: அலுவலர்களை சூழ்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர் - லஞ்ச ஒழிப்புத்துறையினர் வடவள்ளியில் சோதனை
கோயம்புத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் இன்று (மார்ச் 15) லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, கோவை வடவள்ளி பகுதியில் எஸ்.பி. வேலுமணியின் தொழில் பங்குதாரரான சந்திரசேகரின் வீட்டில் நடைபெற்ற சோதனை முடிவடைந்த நிலையில், அங்கு எதுவும் கைப்பற்றப்படவில்லை என சந்திரசேகரின் மனைவி சர்மிளா தெரிவித்துள்ளார். சோதனை முடிந்து அலுவலர்கள் செல்லும்போது, அங்கு திரண்டிருந்த அதிமுக ஆதரவாளர்கள் அலுவலர்களை சூழந்துகொண்டு 'திமுக ஒழிக' என கோஷம் எழுப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST