நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவு நாள் நிகழ்வு - அனைத்து இந்திய கிராமிய கலைஞர்கள்
நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து அனைத்து இந்திய கிராமிய கலைஞர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சி நடத்திய கிராமிய கலைஞர்கள், கலைகளை போற்றி பாதுகாக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டனர்.