'முக்காலா முக்காபுலா' பாடலுக்கு டிக்டாக் செய்த வருண் தவான் - டிக்டாக் செய்த வருண் தவான்
வருண் தவான், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் 'ஸ்டிரீட் டான்சர் 3டி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுள்ள வருண் மற்றும் ஷ்ரத்தா ஆகியோர், பாபா ஜாக்சன் என அறியப்படும் டிக்டாக் பிரபலம் யுவராஜ் சிங் பரிஹார் உடன் இணைந்து 'முக்காலா முக்காபுலா' பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.