‘வானம் கொட்டட்டும் கதையைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது’ - விக்ரம் பிரபு - வானம் கொட்டட்டும் விமர்சனம்
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா இயக்கியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. இந்தப்படத்தில் சரத்குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத்குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் கதையை தேர்ந்தெடுத்த அனுபவம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “'வானம் கொட்டட்டும்' முழுக்க முழுக்க குடும்பங்களுக்கான படம். இதுபோன்ற படங்களில் நான் நடித்ததில்லை. இந்தக் கதையைக் கேட்டவுடன் பிடித்துவிட்டது” என்றார்.