'செர்ரி'யில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்- டாம் ஹோலண்ட் - tom holland latest news
மார்வெல் அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்து அசத்தியவர் டாம் ஹோலண்ட். இவர் அண்மையில் ஜோ, ஆண்டனி ரூஸோ ஆகியோர் இயக்கியுள்ள 'செர்ரி' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடித்தது மிகவும் கடினமாக இருந்ததாக டாம் ஹோலண்ட் தெரிவித்துள்ளார். கிரைம் ட்ராமாவாக உருவாகியுள்ள திரைப்படத்தில் போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசாடர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ மருத்துவ அலுவலராக டாம் ஹோலண்ட் நடித்துள்ளார். 'செர்ரி' இன்று (பிப். 26) சில திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் மார்ச் 12ஆம் தேதி ஆப்பிள் டிவி +இல் வெளியாகவுள்ளது.