’படத்தை ஓடிடியில் வெளியிட முயற்சி செய்தோம்’ - சுல்தான் படத் தயாரிப்பாளர் - சுல்தான் பட தயாரிப்பாளர்
ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் படத்தின் கார்த்தி, ராஷ்மிகா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.