கரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட தம்பி ராமையா - தம்பி ராமையாவின் கரோனா விழிப்புணர்வு வீடியோ
சென்னை: தேசிய சுகாதார இயக்ககம் 10 வயதிற்கு உள்பட்டவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்வதற்காக வெளியில் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது. இது குறித்து நடிகர் தம்பி ராமையா நடிப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தயாரித்து தேசிய சுகாதார இயக்ககம் வெளியிட்டுள்ளது.நடிகர் தம்பி ராமையா அவருக்கே உரிய பாணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தகவலை பரப்பி உள்ளார்.