’சீனாக்காரன் சாப்பிட்டதற்கு நாங்க கைய கழுவணுமா’- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் விழிப்புணர்வு பாடல் - srikanth deva
கரோனா வைரஸ் தொற்று குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சிலரோ தங்களது பாடல்கள் மூலம் கரோனா வைரஸ் தொற்று குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அந்தவகையில் கரோனா வைரஸ் தொற்று குறித்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சீனாக்காரன் சாப்பிட்டதற்கு, நாங்க கைய கழுவணுமா’ என்று தொடங்கும் பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.