தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் கொடுத்து புரட்சி செய்தவர் கோபிநாத்'- நடிகர் சூர்யா - actor suriya press meet in soorarai pottru audio launch

By

Published : Feb 13, 2020, 8:11 PM IST

சென்னை: நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடுவானில் விமானத்தில் நடந்தது. அதில் 'அகரம்' அறக்கட்டளையைச் சேர்ந்த 100 மாணவ-மாணவியர் சூர்யாவுடன் நடுவானில் பயணித்து, இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று தமிழ்நாட்டிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிகளில் கட்டுரைப் போட்டி மூலமாகத் தேர்வு செய்து, 'அகரம்' அறக்கட்டளை, 'சூரரைப் போற்று' திரைப்படத் தயாரிப்பு குழுவும் இந்த ஏற்பாட்டை நடத்தியது. இதன்பின்னர் நடுவானத்தில் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. விமானத்தில் படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. படத்தின் இசையமைப்பளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யா விமானத்தில், இசை வெளியிடப்பட்டதைக் குறித்த தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details