'வாட் ஏ மேன்'- மாநாடுக்குத் தயாராகும் சிம்பு - சிம்பு நடிக்கும் மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்தப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்க இருக்கும் நிலையில், நடிகர் சிம்பு அதற்காகத் தயாராகி வருகிறார். தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிம்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.