Maanaadu Release - திரையரங்குகளில் சிம்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' இன்று (நவம்பர் 25) வெளியாகிறது. இதனையொட்டி அதிகாலை முதல் சிம்பு ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் கொண்டாடிவருகின்றனர். இதனிடையே திரையரங்குகளில் கேடிஎம் பிரச்சினை காரணமாகக் காலை 5 மணிக்கு ரிலீஸாகும் சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.